
பள்ளிகளுக்கான புதிய தவணை அடுத்த வாரம் தொடங்க இருக்கும் நிலியயில், அதற்கு முன்னர் 50 விழுக்காட்டு சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். ‘பிக்கிட்ஸ்’ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 50 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை அமைச்சு உறுதி செய்ய விரும்புவதாக அவர் கூறினார். கோவிட்-19 தொற்றினால் கடுமையான தாக்கம் ஏற்படுவதிலிருந்து விடுபடுவதற்கு ஏதுவாக தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசியைச் செலுத்தும்படி பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
