25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

கெடுக்கும் அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு ஜோகூர் தேர்தல் தக்க பாடம்

🔥 Views : 5
👁 Reading Now : 44

தேர்தலில் தங்களின் வேட்பாளர் வெல்ல வேண்டும்; கட்சி வளர வேண்டும் என்பதைவிட, மற்ற கட்சிகளின் வெற்றி வாய்ப்பைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஜோகூர் சட்டமன்றத் தேர்தல தக்க பாடம் கற்பித்துள்ளது. பெஜுவாங் கட்சி போட்டியிட்ட 42 தொகுதிகள், வாரிசான் களமிறக்கிய 6 வேட்பாளர்கள், சுயேச்சைகள் 16 பேர் ஆகிய அனைவரும் வைப்புத் தொகையை இழந்து மண்ணைக் கௌவ்வினர். தமிழ் நாட்டில் மிகவும் மிகவும் செல்வாக்கு பெற்ற வைகோ, விஜயகாந்த் ஆகியோரின் கட்சிகள் இந்தக் கீழான புத்தியினாலேயே இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. தீராம் தொகுதியில் போட்டியிட்ட இரண்டு இந்திய சுயேச்சைகளுக்கும் வெல்லும் நோக்கம் இல்லை; மாறாக, அங்கு போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற கெடுமதியைத்தான் அவர்கள் கொண்டிருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles