
பாகிஸ்தானில் ஆட்சியை தக்க வைக்க பிரதமர் இம்ரான் கான், போராடி வருகிறார்.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக இம்ரான் கானின் சொந்த கட்சியை சேர்ந்த 24 நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிக்கபோவதாக எச்சரித்துள்ள நிலையில் பாகிஸ்தானில் புதிய அரசியல் சிக்கல் எழுந்துள்ளது.
மார்ச் 8ஆம் தேதி, பிரதமருக்கு எதிராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியினர், பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்தவர் என 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய நாடாளுமன்ற செயலகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இது குறித்து விவாதிக்க நாளை மார்ச் 21-இல் நாடாளுமன்றம் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மார்ச் 28-இல் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
