25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

ரபிசி ரம்லி வருகை: பிகேஆர் கட்சியில் மாற்றம் ஏற்படுத்துமா?

🔥 Views : 7
👁 Reading Now : 59

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி முன்வந்திருப்பது கட்சிக்குள்ளும், வெளியேயும் பரவலான வரவேற்பையும், ஆதரவையும் பெற்றிருக்கிறது. இதனால், கட்சியில் முன்னேற்றகரமான ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கட்சித் தேர்தலில் அப்போதைய துணைத் தலைவர் அஸ்மின் அலியிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் ரபிசி ரம்லி. அதன் பின்னர் அவர் மீதான வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றார். 2018 பொதுத் தேர்தலில் அவர் மீதான அரசியல் வழக்கு தொடர்பான தண்டணையால் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினராக 2013 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர் ரபிசி ரம்லி. அவர் போட்டியிடாததால் 2018 பொதுத் தேர்தலில் பாண்டான் தொகுதியில் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் போட்டியிட்டு வென்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles