25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

இலவச இணைய சேவை வழங்கும் ஒரே மாநிலம் சிலாங்கூர்
-மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

🔥 Views : 7
👁 Reading Now : 27

இவ்வாண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை 32,214 பேர் சிலாங்கூர் அரசின் இலவச இணையத் தரவு சேவையின்வழி பயன்பெற்றுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஓராண்டு காலத்திற்கு இலவசமாக இணையச் சேவையை வழங்கும் இத்திட்டத்தின்வழி பிளேட்ஸ் எனப்படும் பிளாட்ஃபார்ம் சிலாங்கூர், இணைய வணிகர்கள், யுனிசெல் மற்றும் சிலாங்கூர் பன்னாட்டு இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் பயன்பெறத் தகுதி பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

இது தவிர, பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் சிலாங்கூர் அரசின் டியூஷன் ராக்யாட் திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்கள் உள்பட 10,000 பேருக்கு இலவச இணைய சேவைக்கான சிம் கார்டுகள் வழங்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles