
நாட்டில் 5G இணைய கற்றலை தொடர்பான ஒப்பந்த வேலை மற்றும் சேவை தொடர்பில் பூமிபுத்ராக்களுக்கு 61% முன்னுரிமை என்பது புதிய அளவுகோலா என்று ஜசெக புதிய தலைவர் லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் தெங்கு ஸப்ருள் அஸிஸ் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
இதற்கு முன், பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில், பூமிபுத்ராக்களுக்கு 51% பங்குரிமை அளிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு, அடுத்த ஆண்டு 2023 ஜனவரி முதல் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இடையில் இப்பொழுது இணைய சேவை தொடர்பான 5-ஜி உயர் தொழில்நுட்ப ஒப்பந்தப் பணிகளில் பூமிபுத்ராக்களுக்கு 61விழுக்காட்டு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்ததன் தொடர்பில் லிம் எழுப்பிய கேள்விக்கு இதுவரை நிதி அமைச்சகம் விளக்க அளிக்கவில்லை.
