25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது

🔥 Views : 8
👁 Reading Now : 42

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 கோடியைத் தாண்டியுள்ளது.
அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.43 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles