
இரண்டு எல்ஆர்டி ரயில்கள் மோதல் விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியப் போக்கே காரணம் என்று விசாரணையில் தெரிய வருவதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்
பயணிகள் இல்லாமல், வெற்று பெட்டிகளை ஏற்றிச் சென்ற இரயிலைத் தவறான திசைக்கு முடுக்கிவிட்ட ஓட்டுநரின் அலட்சியம்தான், கிளானா ஜெயா எல்ஆர்டி விபத்துக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.
டிஆர் 40 இரயிலைத் தவறான திசையில் ஓட்டி வந்த ஓட்டுநரின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
“தெற்கு நோக்கிச் செல்ல வேண்டிய டிஆர் 40 டாங் வாங்கி நிலையம் நோக்கிச் சென்ற திசையில், வேறுபட்ட நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்தது,.
இதன் விளைவாக டிஆர் 40 மற்றும் டிஆர் 81 இடையே மோதல் ஏற்பட்டது.
“நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் சமர்ப்பித்தப் பூர்வாங்கக் கண்டுபிடிப்புகள் இவை என்று அவர் தெரிவித்தார்
