27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

புதிய SOP விதிமுறையால் கேமரன்மலை காய்கறி விவசாயிகள் பரிதவிப்பு!

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வர்த்தக தளங்கள் செயல்பட அரசாங்கம் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் கேமரன் மலை காய்கறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். கேமரன் மலை காய்கறி விவசாயிகள் மாலை நேரத்தில் காய்கறிகளை சேகரிப்பார்கள். பின்னர் வியாபாரிகள் இரவு நேரத்தில் காய்கறிகளை சிங்கப்பூர் உட்பட பல இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
இப்போது காலை முதல் 8 மணி முதல் இரவு 8ன மணி வரை மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதால் இவர்கள் வியாபாரம் பெருமளவில்ன பாதிக்கப்பட்டிருப்பதாக தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் சியோங் யோர்க் கோங் தெரிவித்தார்.
இரவு நேரங்களில் மட்டுமே காய்கறிகளை லோரிகளில் ஏற்றிக்கொண்டு பசாருக்கு கொண்டு செல்வார்கள்.
இப்போது புதிய விதிமுறைகளால் இவர்களளின் வியாபாரம் பாதிக்கப்பட்டு காய்கறிகள் பெருமளவில் சேதமுற்ற வருவதாக அவர் சொன்னார்.
கேமரன் மலை காய்கறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண நேரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles