
சிலாங்கூரில் ஓடும் ஆறுகளில் நீரின் தன்மை தரமாக இருப்பதோடு பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையிலும் இருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
சிலாங்கூரில் ஓடும் பெரிய ஆறுகளின் நீரின் தரம் முதல், இரண்டாம் கட்டங்களில் உள்ளன என்பது சுற்றுச்சூழல் துறையின் நீர் தர குறியீட்டின்வழி தெரியவந்துள்ளது. அதேவேளை, கிள்ளான் ஆறு மற்றும் லங்காட் ஆற்றின் ஒரு பகுதி மிதமான தரத்தைக் கொண்டுள்ளதை அந்த அறிக்கை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சில ஆறுகளின் தரக் குறியீடு 89 ஆக உள்ளது. இது, ஆறுகளின் சிறப்பான தரத்தை பிரதிபலிக்கிறது. சுற்றுச்சூழல் துறையின் விதிகளின்படி மிதமான தரத்தைக் கொண்ட நீரை சுத்தமான நீராக மாற்ற முடியும். ஆனால் அதற்கு அதிக செலவு பிடிக்கும் என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.



