
கல்வி அமைச்சு மேற்கொண்ட சிறப்புத் திட்டத்தின்கீழ் 13,000-கும் அதிகமான ஆசிரியர்கள் அண்மையில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தாலும், நாட்டில் ஆங்கில-இஸ்லாமிய பாடங்களை போதிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவ்விரு பாடங்களையும் படித்துக் கொடுப்பதாற்கான பட்டப்படிப்பை முடித்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அப்பாடத்தை போதிக்கக் கூடிய ஆசிரியர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, கல்வியமைச்சர் ரட்சி ஜீடின் தெரிவித்தார். இவ்வேளையில், பள்ளிகளில் இதர பாடங்களை போதிக்கக் கூடிய ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் பற்றாக்குறை நிலவினாலும், தற்போதைக்கு ஆங்கில மொழி ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்துவதில் கடினமான சூழலை எதிர்நோக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
