
MySejahtera மொபைல் செயலி தொடர்பான அனைத்து விவகாரங்களையும் அடையாளம் காண நாடாளுமன்றத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
MySejahtera செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள தனிப்பட்டவர்களின் ரகசியத் தகவல் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
MySejahtera செயலியை உருவாக்கிய KPISoft Malaysia Sdn Bhd, சிங்கப்பூரைச் சேர்ந்த என்டோமோ பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்திற்கு 100% சொந்தமானது. இப்படிப்பட்ட நிலையில்,
மலேசியர்களின் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தரவுகளை சேகரிக்கும் மென்பொருளை உருவாக்கி நிர்வகிக்க, பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு ஒப்பந்தம்-CSR இல்லாமல் மலேசிய அரசு ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை ஈடுபடுத்தியது கவலையளிக்கிறது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
