
இனம், மொழி, சமயம், பண்பாடு கடந்து ஒட்டு மொத்த மலேசியர்களும் உடற்பயிற்சி என்பதை அடியோடு மறந்து வருகின்றனர். இத்துடன், உணவிலும் கட்டுப்பாடு இன்மையால், மலேசிய மக்களில் இருவரில் ஒருவர் பருமனான உடல்வாகைக் கொண்டிருக்கிறனர்.
ஆசியான் நாடுகளில் மலேசியா இந்தச் சிக்கலை அதிகமாக எதிர்கொள்கிறது.
ஐந்து நிமிட இடைவெளி கிடைத்தால்கூட, உடனே விவேக கைபேசியை எடுத்து அதன் சின்னத் திரையில் தங்களின் முகத்திரையை பதிய வைக்கின்றனர்.
மாணவர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள், உயர்நிலை அதிகாரிகள் என எல்லாத் தரப்பு மக்களும் இத்தகைய வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது. இதைக் காதில் போட்டுக் கொள்ளத்தான் ஒருவரையும் காணவில்லை.
