
மலேசியாவில் வேலை செய்வதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து ஏப்ரல் 1ஆம் தேதிவரை 4லட்சத்து 75ஆயிரத்து 678 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
தயாரிப்பு-தொழில்துறையில் அதிகமாக 2லட்சத்து 90ஆயிரத்து 248 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 2,605 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
