
குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் சவால்கள் இருப்பினும், உலகின் இதர பகுதிகளைக் காட்டிலும், மலேசியர்கள் அதிக குழந்தைகளுடன் பெரிய குடும்பத்தை உருவாக்க விரும்புவதாக தற்போதியய ஒரு புத்தாய்வு சுட்டிக்காட்டுகின்றது.
Ipsos பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், மலேசியர்கள் பெரும்பாலும் குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். இவ்வேளையில், அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பாத மலேசியர்கள், கோவிட்-19 பெருந்தொற்றை காரணமாக முன் வைத்துள்ளனர். அதையடுத்து, வேலையிட சுமையையும் ஒரு காரணமாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
