
டாக்டர் மகாதீர் விசாரணைக்காக அழைக்கப்படமாட்டார் எனத் தெரிவித்துள்ள புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் Abdul Jalil Hassan, இதற்குமுன் மார்ச் 23-இல் மகாதீர் கடைசியாக விசாரனைக்கு அழைக்கப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுவும், சட்டத்துறை முன்னாள் தலைவர் டோனி தோமஸ் நூல் சம்பந்தமாக ஒரு சாட்சியாக மட்டும் அழைக்கப்பட்டு சில கேள்விகள் கேட்கப்பட்டார்.
முன்னதாக, தனக்கு அடுத்து, அதனை அடுத்து பிரதமராக வந்த நஜீப்பிற்கு ஆண்டுக் கணக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் அவர் ஒரு நாள்கூட சிறையில் கழித்ததில்லை என்றும் இதுதான் மலேசிய நீதி என்றும் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுவிட்டு, இப்படி சொல்வதற்காக தாம் விசாரிக்கப்படலாம் என்றும் மகாதீர் தெரிவித்திருந்த நிலையில், இதன் தொடர்பில் காவல் துறை மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளது.
