
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையினரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலதிபரும் தன் கணவருமான எஸ் தனபாலனின் மரணம் தொடர்பில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி காவல்துறைக்கும் அரசுக்கும் எதிராக வழக்கு தொடுத்த கைம்பெண் மனைவி வி.சாந்தி தோல்வி அடைந்தார்.
இரகசிய கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட தனபாலன், இரு வாரம் கழித்து 2019 ஏப்ரல் 17-இல் ஷா ஆலம் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிராக சாந்தி, இரு பிள்ளைகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நிதிபதி Choo Kah Sing தள்ளுபடி செய்துள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாக வாதித்தரப்பு வழக்கறிஞர்களான எம்.விஸ்வநாதனும் சஞ்சய்நாதனும் தெரிவித்துள்ளனர்.
