
கொரோனா கால இடரை சமாளிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களின் ஊழியர் நல சேமிப்பு நிதியிலிருந்து பணத்தை மீட்கலாம் என கடந்த மாதம் அரசு அறிவித்தது.
இதன்மூலம், வெ.20 பில்லியன் வரை மீட்கப்படலாம் என்றும், இது அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதிபலிக்கும் அதேவேளை இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு 0.5% அளவுக்கு பங்காற்றுவதுடன் பொதுமக்களின் செலவின அளவீட்டையும் 0.8% அளவுக்கு உயர்த்தும் என தேசிய வங்கியான பேங்க் நெகாரா கணித்துள்ளது.
இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை மீட்பதற்கு அரசு அனுமதிப்பது இது நான்காவது தடவை என்றும் இதுவே கடைசி முறையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
