
மைசெஜாத்ராவில் உள்ள பயணிகளுக்கான படிவத்தை வெளிநாட்டுப் பயணிகள் பலரும் பூர்த்தி செய்யாத காரணத்தால், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக , குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
அன்றைய தினம் குடிநுழைவுத் துறையின் சேவை முகப்பிடங்களில் 3 மட்டுமே திறக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அத்துறை மறுத்தது.
அன்றைய தினம் மொத்தம் 26 முகப்பிடங்கள் திறக்கப்பட்டிருந்ததாக அத்துறை கூறியது.
