
கட்சி தாவலைத் தடுக்கும் மசோதா விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் அந்த மசோதாவுக்கு தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனரா என்பதை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோனி லோக் வலியுறுத்தினார்.
கட்சித் தாவலை தடுக்கும் மசோதா அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் குறைந்தபட்சம் 148 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
