
எல்லை பாஸ் முடிவுற்ற காலத்திற்குப் பிறகும் தாய்லந்தில் தங்கியிருக்கும் 10,000த்திற்கும் மேற்பட்ட மலேசிய பிரஜைகள் அங்கு சட்டவிரோத குடியேறிகள் என்ற தகுதியில் இருக்கின்றனர்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்துவதற்கு முன் அவர்கள் அந்த அண்டை நாட்டிற்குள் சென்ற நிலையில் எல்லையும் மூடப்பட்டதால், அவர்கள் நாட்டிற்குள் திரும்ப முடியவில்லை.
தாங்கள் தாயகம் திரும்புவதற்கு மலேசிய அரசாங்கம் உதவ வேண்டும் என தாய்லாந்தில் சிக்கிக் கொண்டுள்ள மலேசியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
