25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தொழிலை விரைவில் அபிவிருத்தி செய்ய இந்த பயிற்சி உதவும்!

🔥 Views : 18
👁 Reading Now : 33

இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சியில் பங்கு பெறுவது மூலம் விரைவில் அபிவிருத்தி செய்ய உதவும் என தாம் நம்புவதாக PRO SECURETEAM SERVICES என்ற துப்புரவு சேவை நிறுவனத்தை நடத்தி வரும் பி. கரிகாலன் கூறுகிறார்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக சைபர் ஜெயாவில் இந்த நிறுவனத்தை தாம் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
‘இந்த தொழிலை நான் தொடங்குவதற்கு ஒரு பின்னணி உண்டு. ஒரு அலுவலகத்திற்கு நான் சென்றிருந்தபோது அங்கு அசுத்தமாக இருந்த சூழ்நிலையை நான் பார்த்தேன். ஏன் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்று அங்கு கேட்டபோது, இங்கு இப்படி தான் இருக்கும். ஏன் துப்புரவு செய்யும் தொழிலை நீங்கள் தொடங்கக்கூடாது? என அங்குள்ளவர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர் என்றார் அவர்.
இதற்குப் பிறகு தான் இந்த துப்புரவு சேவை தொழிலை தாம் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.


தற்போது 10 தொழிலாளர்களை கொண்டு இந்த தொழிலை தாம் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
தமது இந்த தொழிலை விரிவாக்கம் செய்ய தாம் திட்டம் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
தற்போது உலகமே செயற்கை நுண்ணறிவை(AI) நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் Heineken நிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்படும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள தாம் ஆர்வம் கொண்டிருப்பதாக கரிகாலன் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles