
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்கள் வரும் 27.4.2022 அன்று 1,000 ரிங் கிட் அல்லது ஒரு மாதச் சம்பளத்தை நோன்புப் பெருநாள் சிறப்பு த் தொகை யாகப் பெறுவர் என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்……அரசுப் பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இவர் களுக்கு இந்த உதவித் தொகை பெருநாள் செலவுகளைச் சமாளிக்க உதவும் என்று அவர் கூறினார்….. இந்த ச் சிறப்பு நிதிக்கு 39.1 இலட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஷா ஆலம் டேவான் ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்த அறிவிப்பைச் செய்தார்….அதே வேளையில் மாநில அளவில் இருக்கும் பள்ளி வாசல் சமயப் போதகர்கள் மற்றும் சூராவ் பொறுப்பாளர்களும் 500 ரிங் கிட் உதவித் தொகை யைப் பெறுவர் என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் தெரிவித்தார்.
