
அமைச்சரவையில் நிறைய அரசியல் தவளைகள் இருக்கும்போது கட்சி தாவலை தடுக்கும் மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்து அதனை நிறைவேற்றுவது எளிதான காரியம் அல்ல என அம்னோ மூத்த தலைவர் Shahrir Samad தெரிவித்தார்.
14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தாங்கள் இருந்து வந்த கட்சியிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளுக்கு தாவியதை அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்களே கட்சி தாவியர்களாக இருக்கும்போது அவர்கள் அங்கம் வகிக்கும் அரசாங்கம் கட்சி தாவுவதை தடுக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதும் அதனை ஆதரிப்பதும் சந்தேகமே என ஷாரிர் சுட்டிக்காட்டினார்.
