33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

விடுதலைப் புலிகள் இயக்கம்: பயங்கரவாதப் பட்டியலிலிருந்து அகற்றக் கோரும் வழக்கு ஏப்ரல் 14-இல் விசாரணை

🔥 Views : 4
👁 Reading Now : 65

மலேசிய பயங்கரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை அகற்றக் கோரும் வழக்கு வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அந்த வழக்கைத் தொடுத்துள்ள பாலமுருகன் வீராசாமி இதனைத் தெரிவித்தார்.

ஏற்கனவே உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுதாரர் சார்பின் அருள் மேத்யுஸ் , ஓமார் குட்டி, முகமது பர்அன், க.கலைநிலா, லிம் வெய் ஜெய்ட் மற்றும் டத்தோ அம்பிகா ஆகிய வழக்கறிஞர்கள் இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்பார்கள் என வீ.பாலமுருகன்கூறினார் .
தமிழீழ இராணுவமான விடுதலைப் புலிகள் இயக்கம், கடந்த 2009ஆம் ஆண்டு செயலிழந்தது.

அந்த செயலிழந்த இயக்கத்தை அதுவும் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 2014ஆம் ஆண்டு மலேசிய பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தது தவறு என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles