
ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் இருந்து ரஷ்யாவை தற்காலிகமாக நீக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் மலேசியா பங்கேற்கவில்லை.
வியாழக்கிழமை நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில் மலேசியா உட்பட ஐ.நா.-வில் உறுப்பினராக இருக்கும் 58 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஆசியான் உறுப்பு நாடுகளான சிங்கப்பூர், இந்தோனேசியா, கம்போடியா ஆகியவையும் அந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆசியானின் மற்றொரு உறுப்பு நாடான வியட்னாம் உட்பட 93 நாடுகள் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
24 நாடுகள் அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
