30.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

கோவிட் நோயாளிகளில் 98 விழுக்காட்டினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் கிட்டத்தட்ட 98 விழுக்காட்டினர் வீட்டிலேயே தங்களை தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாக , சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும் லேசான அறிகுறிகளையே கொண்டிருப்பதாகவும், அவர்கள் மெய்நிகர் கோவிட் மதிப்பீட்டு மையத்தால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

சுகாதார அமைச்சின் புள்ளிவிபரத்தின் படி, நாட்டில் 1 லட்சத்து 53, 859 பேர் கோவிட்டால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 விழுக்காட்டினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles