34.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

காணாமல்போன மூன்று முக்குளிப்பாளர்களில் இருவர் மீட்கப்பட்டனர்

Mersing கடல் பகுதியில் Pulau Tokong Sangol தீவில் காணாமல்போன வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று முக்குளிப்பாளர்களில் இருவர் இன்று அதிகாலையில் மீட்கப்பட்டனர்.

பிரிட்டனைச் சேர்ந்த Adrian Peter Chesters,
பிரான்சைச் சேர்ந்த Alezia Alexandra Molina ஆகியோரை அதிகாலை ஒரு மணியளவில் உள்நாட்டு மீனவர்கள் கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக Mersing மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Cyril Edward தெரிவித்தார்.

கடல் போலீசாரால் மீட்கப்பட்ட அவ்விருவரும் பாசீர் கூடாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களின் நிலை சீராக உள்ளது. Adrian Peter ரின் 14 வயது மகன் Nathen Renze Chester இன்னும் கண்டறியப்படவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles