
யுக்ரேனின் Kramatorsk ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா தொடுத்த ஏவுகணை தாக்குதலில், 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்;
100-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டின் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த ரயில் நிலையத்தின் மீது இரு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
யுக்ரேனின் கிழக்குப் பகுதியில் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Kramatorsk ரயில் நிலையத்தில், சம்பவத்தின்போது அப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்ததாக Donetsk பகுதியின் ஆளுநர் தெரிவித்தார்.



