
பிரதமர் டத்தோஸ்ரீ Ismail sabri Yaakob, தான் அதிகாரத்தில் தொடர்வதற்காக எந்த அரசியல் கட்சியிடமும் கெஞ்சியதில்லை என கூறியுள்ளார்.
Agenda Daily என்ற இணையத்தள பதிவேட்டின் உரிமையாளர் Izwan Mohd Zubit என்பவர் வெளியிட்ட செய்தி தொடர்பாக அவதூறு வழக்கு தொடுத்திருக்கும் இஸ்மாயில் சப்ரி, தமது பதில் மனுவில் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தில் இருப்பதற்காக அரசியல் கட்சிகளிடம் தாம் கெஞ்சுவதாக Izwan வெளியிட்டிருக்கும் செய்தி ஒட்டுமொத்தமாக உண்மையில்லை என்பதோடு அது அடிப்படையற்ற தகவல் என தமது வழக்கு மனுவில் Ismail Sabri தெரிவித்துள்ளார்.
