
அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெர்மாத்தாங் தொகுதியிலேயே சேவையாற்ற விரும்புவதால், வரும் 15-ஆவது பொதுத் தேர்தலில் இதேத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக நூருள் இஸா அன்வார் தெரிவித்துள்ளார்.
போதைப் பித்தர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் உள்ளிட்ட அதிகமான சமூக நலத்திட்டங்களை இந்தத் தொகுதியில் தொடர வேண்டி இருப்பதால் இங்கு மீண்டும் களம் காண இருப்பதாக நூருள் தெரிவித்துள்ளார்.
எனினும், கட்சித் தலைமை எடுக்கும் முடிவைப் பொறுத்து தான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது உறுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
