
முன்பெல்லாம் பண்டிகை அல்லாத சமயங்களில் சபா, சரவாக் மாநிலங்களுக்கு சென்று திரும்ப ஏறக்குறைய வெ.300 அளவில் விமான பயணத்திற்கு முன்பதிவு செய்யலாம். பண்டிகைக் காலத்தில் இந்த விலையில் மாற்றமோ சற்று அதிகரிப்போ இருக்கும்.
ஆனால், இப்பொழுது நிலைமை தாறுமாறாக இருப்பதால், சபா, சரவாக்கில் நோன்புத் திருநாளைக் கொண்டாட எண்ணி, கோத்தா கினபாலு, கூச்சிங் முனையங்களுக்கு முன்பதிவு செய்ய விரும்பும் மலேசியப் பயணியர் பின்வாங்குகின்றனர்.
கொரோனாவில் கடந்த ஈராண்டுகளாக இருந்த இடத்திலேயே பண்டிகையைக் கொண்டாடிய மக்கள், தற்பொழுது எல்லைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சபா-சரவாக் மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் வேளையில் கட்டணம் வெ.2,000 வரை உயர்ந்துள்ளதைக் கண்டு மிரட்சி அடைந்துள்ளனர்.
