25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

நாடாளுமன்றத்தை கலைக்கும்முன்
பெரிக்காத்தான் கூட்டணியுடன் ஆலோசிக்க வேண்டும்

15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முடிவெடுப்பதற்கு முன்பாக, அது குறித்து பெரிக்காத்தான் நெஷனல் கூட்டணியுடன் கலந்து பேச வேண்டுமென, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை, அக்கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நினைவுறுத்தியுள்ளார்.

கூட்டரசு அரசாங்கத்தை அமைத்திருக்கும் முக்கிய கூட்டணி என்ற ரீதியில் தாம் அந்த நினைவுறுத்தலை முன் வைப்பதாக அவர் கூறினார். புத்ராஜெயா Sri Perdana-வில் பெரிக்காத்தான் நெஷனல் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரதமரை சந்தித்தனர். அப்போது, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சபா STAR கட்சியின் தலைவர் ஜெஃப்ரி கிட்டிஙான், SAPP கட்சியின் தலைவர் Yong Teck Lee, கெரக்கான் கட்சி தலைவர் செனட்டர் டொமினிக் லாவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles