25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

14-ஆவது நாடாளுமன்றத்தின் ஆயுள் நெருங்குகிறது:
-ஜூலை மாதத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டம் என்பது
ஏமாற்று வித்தையாக இருக்கலாம்

கட்சி தாவியவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கொல்லைப்புற அரசாங்கத்தின் 2-ஆவது அத்தியாயத்தை வழிநடத்துபவர்கள் கட்சித் தாவல் தடைச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவார்களா என்பது ஐயமே!

இருந்தபோதும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட்டோமே என்பதற்காக இதோ 2021 டிசம்பரில் கட்சித்தாவல் தடைச்சட்டம் என்றவர்கள், கடைசி நேரத்தில் பின்வாங்கி, 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் என்றார்கள்; அதுவும் இல்லை யென்றாகி, 2022 ஏப்ரல் 11-இல் என்றார்கள். இப்பொழுது ஜூலை என்கிறார்கள்.

அதற்குள் நாடாளுமன்றத்தைக் களைத்துவிட்டால், கட்சித் தாவல் தடைச்சட்டத்தை நிறைவேற்றுவதில் இருந்து தப்பித்து விடலாம் என்று கட்சி தாவியக் கூட்டத்தினர் பின்னால் திரும்பிக் கொண்டு சிரிப்பது ஏஎஸ்டி-யின் அகக் கண்ணில் தெரிகிறது. அதற்குத் தகுந்தபடி, இஸ்மாயில் தலைமையிலான அரசு, இளம் வாக்காளர்களை கவரும் வண்ணம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்குமான அறிவிப்புகளை வரிசையாக வெளியிட்டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles