
அண்மையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மேற்கொண்டிருந்த பயணம் தொடர்பில், நாட்டின் இரு அரச தந்திர அதிகாரிகள் திரும்ப அழைக்கப்பட்டதை விஸ்மா புத்ரா ஒப்புக் கொண்டது.
பிரதமரை வரவேற்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளை முறையாக ஒருங்கிணைக்க தவறியதற்காக , அவ்விரு அதிகாரிகள் மீது அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவொன்றும் புதிய விவகாரமல்ல என விஸ்மா புத்ரா குறிப்பிட்டது.
துபாய் குடிநுழைவு துறையினரால் கடப்பிதழை சரிபார்க்கும் வரை , விமான நிலையம் வந்திறங்கும் பகுதியில் பிரதமர் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பில் முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
