30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மருந்து வாங்க வருபவர்கள்
மரண சான்றிதழ் பெறும் நிலை

🔥 Views : 5
👁 Reading Now : 50

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டின் பொது சுகாதாரத் துறையையும் கடுமையாக பாதித்திருக்கிறது. அரசின் கவனம் மருத்துவத்துறையின் பக்கம் திரும்பாவிட்டால், இன்னும் இரு வாரங்களில் நாடு மிக மோசமான பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளுமென அரச மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏப்ரல் மாத இறுதியில், மத்திய மாகாணத்தில் உள்ள பேராதனை மருத்துவ மனையில் போதுமான மருந்துகள் இல்லாததால், அறுவை சிகிச்சைகளைத் தள்ளிப்போட வேண்டியிருக்குமென அந்த மருத்துவமனையின் நிர்வாகிகள் அறிவித்தனர். அந்த மாகாணத்தில் சுமார் 24 லட்சம் பேர் அந்த மருத்துவமனையையே சிகிச்சைக்காக சார்ந்திருக்கும் நிலையில், அந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனால், இந்த நிலை எல்லா மருத்துவமனைகளுக்கும் ஏற்படலாம் எனவும் மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles