
சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டம்- PICKidsஇன் கீழ் மே 15 ஆம் தேதிக்குப் பிறகு 5 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு Pfizer மற்றும் Sinovac தடுப்பூசி இலவசமாக போடப்படாது.
சிறார்களுக்கான தடுப்பூசியை போடுவதற்கான தேவை தொடர்ந்து குறைந்து வருவதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு இந்த முடிவை செய்திருப்பதாக அதன் துணையமைச்சர் டாக்டர் Noor Azmi Ghazali தெரிவித்தார். கோவிட் தொற்றுக்கு எதிராக சிறார்களுக்கான முதலாவது தடுப்பூசி போடும் கடைசி நாள் மே 15 ஆகும்.
