
பேராக்கில் 2 மாவட்டங்களில் உள்ள 3 பன்றி பண்ணைகளில் உள்ள 3,000-கும் மேற்பட்ட பன்றிகள், ஆப்பிரிக்க பன்றி சளிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருப்பதாக, அம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Razman Zakarian தெரிவித்தார்.
அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பன்றிகளை அழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை 990 பன்றிகள் அழிக்கப்பட்டு முறையாக புதைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், ஆப்பிரிக்க பன்றி சளிக்காய்ச்சல் பரவலினால், பேராக்கில் பன்றி இறைச்சியின் கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
