
மலேசியா குறுந்தொற்று காலத்தை எட்டியதை அடுத்து, மைசெஜாத்ரா செயலி மூலம் வருகையைப் பதிவுசெய்யும் நடைமுறையை தொடர்வதா இல்லையா என்பது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது.
இது குறித்த முடிவு இன்னும் இரு வாரங்களில் தெரிய வருமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார். கோவிட்-19 திரிபான ஒமிக்ரோன் பாதிப்பை மலேசியா கடந்துவிட்டது. எனவே, இன்னும் இரண்டு வாரங்கள் வரை நாட்டில் கோவிட் பாதிப்பினை மதிப்பீடு செய்தபின், மைசெஜாத்ராவின் பயன்பாடு குறித்து முடிவு செய்யப்படுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
