27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

சென்னை திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை கட்டிடத்தின் 2-வது தளத்தில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட ஊழியர்கள் தீயை அணைத்தனர். இந்த திடீர் விபத்தால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. தீ விபத்தினால் மருத்துவமனை அறையில் இருந்த குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த உதயநிதி ஸ்டாலின்

தகவல் அறிந்ததும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles