
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். மாதா பிதா குரு தெய்வம் என்று சான்றோர் சொல்லி வைத்த வேத வாக்கை மதித்து ப் போற்றும் வகையில் அன்னையர் தினம் மலர்ந்துள்ளது. தன் பசி மறந்து பிள்ளை பசியைப் போக்கி மனங் குளிரச் செய்வதில் உத்தமமான உன்னதமான சேவையின் மறு அவதாரம் ஒரு தாய் என்றால் அது மிகையில்லை அந்தத் தாயின் அன்பையும் பாசத்தையும் சிறப்பையும் எடுத்து க் கூறும் ஒரு நாள் இந்த அன்னையர் தினம். அன்புச் சின்னமாய் இந்த அகிலத்தை தனது கருணையால் ஆட் கொண்டு வரும் அன்னையருக்கு ஆராதனை செய்யும் இந்த இனிய நன்னாளில் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகளை மக்கள் தலைவர் டாக்டர் குணராஜ் தெரிவித்துக் கொண்டார். பெண் குலத்தின் பெருமை சேர்க்க அவதாரம் எடுத்து ள்ள அன்னையர் அனைவருக்கும் எங்களின் நல்வாழ்த்துகள்
