34 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

மக்கள் தேவை அறிந்து சேவை ஆற்றும் மனிதநேயர்:
-மக்கள் தலைவர் குணராஜ்

🔥 Views : 17
👁 Reading Now : 55

பிகேஆர் உதவித் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் மக்கள் தலைவர் டாக்டர் ஜி.குணராஜ், செந்தோசா சட்டமன்றத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் சேவையாற்றுவதில் திறன்பெற்றவர்; சளைக்காதவர்.

மனிதநேய மாண்பு கொண்ட மக்கள் தலைவர் டாக்டர் குணராஜ், மக்கள் பணி என்று வந்துவிட்டால் தடை எது வந்தாலும் எதிர் கொண்டு செய்துமுடிக்கும் காரிய சித்தி மிக்கவர்.

பள்ளி மாணவர்கள், பேறு குறைந்த நலிந்த மக்கள் ஆகியத் தரப்பினரின் நலனில் அதிக கவனமும் அக்கறையும் கொண்டிருப்பவர் மக்கள் தலைவர் குணராஜ். அவருக்கு சமுதாயத்தில் ஆதரவு அலை இருப்பதைப் போல பிகேஆர் உறுப்பினர்களிடமும் எழுச்சியான ஆதரவு இருப்பதைக் காண முடிகிறது.

இவரின் சேவையை மதிப்பிடும் வண்ணம் வரும் கெஅடிலான் தேசிய உதவித் தலைவர் தேர்தலில் இவர் வெற்றி பெறுவது திண்ணம் என்று அபிமானிகளும் ஆதரவாளர்களும் தொண்டர்களும் நம்பிக்கை கொண்டு, அந்த இனிய நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles