
ஜசெக-வின் அடையாளத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பட்டுவின் மகளும் பத்து காவான் எம்பியுமான கஸ்தூரி, தன் பிரெஞ்சு காதலர் Alain Morvan-உடன் நேற்று புத்ராஜெயாவில் பதிவு திருமணம் செய்தார்.
கஸ்தூரியின் தாயார் எஸ்.மேரி, தங்கை ஷாலினி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஜசெக மூத்த தலைவரும் கஸ்தூரியின் அரசியல் ஆசானுமான லிம் கிட் சியாங், வழக்கறிஞரும் ஜசெக எம்பியுமான ராம் கர்ப்பால் சிங், மலேசியாவுக்கான பிரெஞ்சு தூதர் Roland Galharague ஆகியோரும் இந்தப் பதிவுத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
மரண தண்டனைக்கு எதிராக 2019 பிப்ரவரியில் பெல்ஜியத்தில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் பிரிட்டிஷ் வழித்தோன்றல் குடும்பத்தைச் சேர்ந்தவரும் என்னைப் போல மரண தண்டனைக்கு எதிரான கருத்தைக் கொண்டவரும் வழக்கறிஞருமான 51 வயது Morvan-ஐ சந்தித்ததாகவும் அதிலிருந்து நாங்கள் இருவரும் நட்பில் இருந்ததாகவும் 43 வயதான பட்டு தெரிவித்தார்.
