
பகடிவதைக்கு ஆளாகி 18 வயதான தி.நவீன் கொலை செய்யப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்நிலையில் பகடிவதை தடுப்பு சட்டத்தை இயற்றக் கோரியும் ஜூன் 15-ஐ பகடிவதை தடுப்பு நாளாக அறிவிக்கக் கோரியும் புத்ராஜெயாவில் தேசிய சட்டத் துறை அலுவலகத்திடம் அறிக்கை வழங்கப்பட்டது.
நவீன் குடும்பத்தின் வழக்கறிஞர் குழுவினர், Nail எனப்படும் நவீன் நடவடிக்கை விசாரணைக் குழுவினர் ஆகியோர் அந்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.
பகடிவதையைக் கடும் குற்றமாக வகைப்படுத்தும் சட்டத்தை இயற்றும் நோக்கத்திலும், நாட்டில் பகடிவதை சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்திலும் அந்த அறிக்கை வழங்கப்பட்டிருப்பதாக Nail குழுவின் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.
