
புதிய வாகனங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கு விற்பனை-சேவை வரி- எஸ்.எஸ்.டி. விலக்கு, ஜூன் 30-க்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்று நிதி அமைச்சகம் கண்டிப்பு காட்டியுள்ளது.
எனினும் புதிய காருக்கான கொள்முதலை இந்த மாத இறுதிக்குள் உறுதி செய்பவர்கள், 2023 மார்ச் 31-வரை எஸ்.எஸ்.டி. வரிவிலக்கை அனுபவிக்கலாம் என்று நிதி அமைச்சர் தெங்கு சஃப்ருள் தெரிவித்திருக்கிறார்.
‘செமிகண்டக்டர்’ என்னும் நுண்வில்லைப் பற்றாக்குறை, வாகன விநியோகத்தில் இடையூறு போன்றவற்றால் வாகன் உற்பத்தி குறைந்தாலும், வரிச் சலுகையிலிருந்து அவர்கள் இன்னும் பயனடைய முடியும் என்பதையும் தெங்கு சஃப்ருள் சுட்டிக் காட்டினார்.
