30.8 C
Kuala Lumpur
Saturday, July 18, 2026

Vetri

லஞ்சத்திற்கு மறுபெயர் கட்சி நிதியா?:
-மகாதீர் மறுப்பதன் பின்னணி என்ன?

🔥 Views : 15
👁 Reading Now : 24

முஹிடின் யாசினுக்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வெ.13 லட்சத்தை, பெர்சாத்து கட்சி பெறவில்லை என அக்கட்சியின் முன்னாள் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்திருக்கிறார்.

2018-இல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தத் தொகை அரசியல் நன்கொடை என்றால், அது கட்சியின் நிதியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த தொகையை அப்போதிருந்த பொருளாளர் பெறவில்லை என, தற்போது பெஜுவாங் கட்சியின் தலைவராக இருக்கும் மகாதீர் கூறியிருக்கிறார்.

முஹிடின், Ultra Kirana நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 3 கட்டங்களில் 13 லட்சம் ரிங்கிட்டை ரொக்கமாக பெற்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டிருப்பதால், மகாதீரும் இதை நீதிமன்றத்தில் மறுப்பாரார என்னும் கேள்வி எழுகிறது; தவிர, நிதியைப் பெற்ற பொருளாளர் அதை கட்சி நிதியில் வரவு வைக்காமல் மற்ற தலைவர்களுடன் பங்கு போட்டிருக்கலாமோ என்ற ஐயமும் எழுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles