
வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் பெரும் எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிளோட்டிகள் அணிவகுத்துச் செல்வது குறித்து சமூக வளைதளத்தில் செய்தி பரவியதி தொடர்ந்து உடனே களத்திய இறங்கிய Muallim மாவட்ட போலீசார் கடுமையான சாலைத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Hasni Mohd Nasir தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் தெற்கு நோக்கி, தஞ்சோங் மாலிமில் உள்ள ஓர் உணவகத்திற்கு படையெடுத்ததாகவும் இவ்வாறு பயணம் செய்த மோட்டார் சைக்கிளோட்டிகள் வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாதது, உரிமம் காலாவதி ஆனது, பக்கவாட்டு கண்ணாடி இல்லாதது, வாகன எண்பட்டை குறைபாடு, புகைப்போக்கிக் குழாயை மாற்றி அமைத்தது உட்பட பல்வேறு போக்குவரவு குற்றங்களைப் புரிந்ததற்காக 307 குற்றப் பதிவு அறிக்கை வெளியிட்டதாகவும் Mohd Hasni மேலும் தெரிவித்தார்.
இந்த சாலைத் தடுப்பு நடவடிக்கையில் 28 அதிகாரிகள் ஏறக்குறைய 7 மணி நேரத்திற்கு ஈடுபட்டனர்.
