
B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு TVET-தொழிற்பயிற்சி கல்விக்கான உதவி நிதித் திட்டத்தை, அரசாங்கம் செயல்படுத்தவிருக்கிறது.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்க்கல்வி வாய்ப்பை பெறுவதில் நிதிச் சிக்கலை எதிர்நோக்காமல் இருக்க, இந்தத் திட்டம் உதவியாக இருக்குமென பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு முறையும் மாணவர் பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, அரசாங்கம் 3 கோடியே 64 லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட்டை ஒதுக்கும். அதன் முதல் பதிவு நடவடிக்கையில் 1,000 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஷா ஆலாமில், TVET தேசிய வாரத்தை தொடக்கி வைத்து பிரதமர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
