30.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

சரவணன் பதவி விலக வேண்டும்:
-சபா முன்னாள் முதால்வர் ஹாரிஸ் சாலே அதிரடி

ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை சட்டப்பூர்வமாக்குவதை ‘முட்டாள்தனமான யோசனை’ என்று கூறியதற்காக மனிதவள அமைச்சர் எம் சரவணன் பதவி விலக வேண்டும் என்று சபா முன்னாள் முதல்வர் ஹாரிஸ் சாலே கேட்டுக் கொண்டுள்ளார்.

சபாவில் மனித மூலதன குடியேற்றம் குறித்து கடந்த வாரத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய சரவணன், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்; மாறாக, அவர்களை சட்டப்பூர்வமாக்கினால், அது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைபவர்களை ஊக்குவிக்கும் என்று கூறினார்.

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான விவகாரம் அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சரவை அல்லது மத்திய அரசின் முடிவை ஏற்கவில்லை என்றால், அந்த அமைச்சர் பதவி விலக வேண்டும்; இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் என்று ஹாரிஸ் சாலே மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles