
கோவிட்-19 பரவாலல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது. இதனால் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரும் அதிகரித்து வருகின்றனர்.
கடந்த வாரம் கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர் எண்ணிக்கை, 28% அதிகரித்து, 14,195 பேர் என்ற அளவுக்கு உயர்ந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 11,096 ஆக இருந்தது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் வீதமும் ஒரு லட்சம் பேருக்கு 4 பேர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
